மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் பலி
x
தினத்தந்தி 14 April 2021 10:55 PM IST (Updated: 14 April 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் பலியானார்.

பரமக்குடி, 
ராமேசுவரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது22), அஜித்குமார் (22) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் ராமேசுவரத்தில் இருந்து புறப் பட்டு மதுரை நோக்கி 13-ம் தேதி இரவு சென்றனர். அப்போது பரமக்குடி அருகே தெளிச்சாத்த நல்லூர் நான்கு வழி சாலையில் வரும்போது மோட் டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் சைக்கிளில் சென்ற அஜித்குமார் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சக்திவேல் கீழே விழுந்து படுகாயம் அடைந் தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்பு 2 பேரையும் மீட்டு பரமக் குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 2 பேரும் ராமேசு வரத்தில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

Next Story