மாவட்ட செய்திகள்

கரூர் அருகே தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி சாவு + "||" + Child

கரூர் அருகே தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி சாவு

கரூர் அருகே தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி சாவு
கரூர் அருகே தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி இறந்தது.
கரூர்
கரூர் அருகே உள்ள வாங்கல் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி மோனிஷா. இந்த தம்பதிக்கு பிறந்து ஒரு மாதமே ஆன தரணிபால் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்தநிலையில், நேற்று முன்தினம் மோனிஷா காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள தாய் வீட்டில் வைத்து தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
அப்போது குழந்தைக்கு புரையேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி
தாத்தா-பாட்டியுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற 2 வயது குழந்தை, மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
2. மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி
மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி தாத்தா-பாட்டி கண்எதிரே பரிதாபம்.
3. கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண் கைது பரபரப்பு வாக்குமூலம்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்திய இளம்பெண் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
4. வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து குழந்தை பலி அக்காள், தம்பி உள்பட 3 பேர் படுகாயம்
வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து குழந்தை பலியானது. அக்காள், தம்பி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. திருமானூா் அருகே பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தை கிறிஸ்துமஸ் குடிலில் வீச்சு
திருமானூர் அருகே பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தையை கிறிஸ்துமஸ் குடிலில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.