தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி


தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 14 April 2021 11:15 PM IST (Updated: 14 April 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பெரம்பலூர், ஏப்.15-
நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு நாள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் தீயணைப்பு அலுவலகத்தில் தீ தொண்டு நாள் வாரம் நேற்று முதல் கடைப்பிடிக்கப்பட்டது. முதல் நாளான நேற்று தீயணைப்பு துறையில் பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கு, பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலியும், நினைவு ஸ்துபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தினர். இன்று (வியாழக்கிழமை) முதல் மாவட்டம் முழுவதும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கி தீ விபத்து, பேரிடர்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது? என்பது குறித்து தீயணைப்பு நிலைய வீரர்கள் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவுள்ளனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு தினத்தையொட்டி பணியின்போது, இறந்த வீரர்களுக்கு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Next Story