பொள்ளாச்சியில் 26 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு ஒருவர் பலி
பொள்ளாச்சியில் 26 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் பலியானாா்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் 26 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் பலியானாா்.
கொரோனாவுக்கு ஒருவர் பலி
பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கொரோனா தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி அழகாபுரி வீதியில் 49 வயது நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
26 பேருக்கு தொற்று
மேலும் தெற்கு ஒன்றியத்தில் ஆவல் சின்னாம்பாளையத்தில் 3 பேர், சமத்தூர், நஞ்சேகவுண்டன்புதூர், கெடிமேடு பகுதிகளில் தலா ஒருவர், ஊஞ்சவேலாம்பட்டியில் 2 பேர், மாக்கினாம் பட்டியில் 4 பேர், சின்னாம்பாளையத்தில் 3 பேர் என்று சேர்த்து 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் ஆச்சிப்பட்டி, ராமபட்டிணத்தில் தலா ஒருவருக்கும், நெகமம் சந்திராபுரத்தில் 2 பேருக்கும் சேர்த்து 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தடுப்பு நடவடிக்கை
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, பொள்ளாச்சி நகர பகுதியில் கடந்த 10 நாட்களுக்குள் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
எனவே பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். தொற்று பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என்றனர்.
Related Tags :
Next Story