கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 14 April 2021 11:19 PM IST (Updated: 14 April 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கீழப்பழுவூர், ஏப்.15-
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாகம், கோவில் எசனை, கோவிலூர் உள்ளிட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையிலான மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசிகளை போட்டனர். இதில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் அனைத்து கிராமங்களிலும் இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.

Next Story