முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.53 லட்சம் அபராதம் வசூல்


முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.53 லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 14 April 2021 11:30 PM IST (Updated: 14 April 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.53 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை மேற்பார்வையில் போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதையொட்டி சாலைகளில் முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களை நிறுத்தி அபராதம் விதித்தனர். இவ்வாறு நேற்று முன்தினம் ஒரே நாளில் ராமநாதபுரம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 181 பேரிடம் முக கவசம் அணியாததற்காக அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாக 3 பேரிடம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மாவட்டத்தில் முககவசம் அணிவதை வலியுறுத்தி அதிரடி சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் சுகாதாரத்துறை மூலம் இதுவரை 12 ஆயிரத்து 675 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.26 லட்சத்து 4 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டு அதில் ரூ.22 லட்சத்து 13 ஆயிரத்து 200 கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.இதேபோல, காவல்துறை சார்பில் 9 ஆயிரத்து 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.18 லட்சத்து 18 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டு அதில் ரூ.11 லட்சத்து 11 ஆயிரம் வசூலிக்கப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, வருவாய்த்துறை சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் 516 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டு அதில் ரூ.42 ஆயிரத்து 600 கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் 2 ஆயிரத்து 850 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அதில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரம் வசூலிக்கப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டம் முழுவதும் ரூ.53 லட்சத்து 17 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டு அதில் ரூ.38 லட்சத்து 53 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டு கரூவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. 

Next Story