கொரோனா தடுப்பூசி திருவிழா


கொரோனா தடுப்பூசி திருவிழா
x
தினத்தந்தி 14 April 2021 11:45 PM IST (Updated: 14 April 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கியது

திருப்பத்தூர், 
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவின் பேரிலும் சுகாதார துணை இயக்குனர் யசோதா மணி அறிவுறுத்தலின்படி கொரோனா வைரஸ் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கியது. வருகிற 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தினந்தோறும் காலை 9.30 மணி அளவில் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் நேற்று 
கொரோனா தடுப்பூசி  திருவிழா நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர்கள் செந்தில்குமார், ஹேமலதா தலைமை தாங்கினர். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர்கள் ராமசாமி, நாகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்று நடைபெற்ற திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 
முன்னதாக அவர்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகள் பரிசோதனை செய்த பின்னர் தடுப்பூசி போடப்பட்டது.மேலும் நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்டு ராஜ், பிள்ளையார்பட்டி வைரவன், செவிலியர் செல்வி அபியா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story