தீயணைப்பு துறையில் பணியின் போது உயிர் நீத்தோருக்கு அஞ்சலி
தீயணைப்பு துறையில் பணியின் போது உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்
புதுக்கோட்டை:
தீயணைப்பு துறையில் பணியின் போது உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் தினம் ஆண்டு தோறும் ஏப்ரல் 14-ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் தீயணைப்பு துறையில் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நீத்தோர் நினைவு தூணுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கந்தர்வகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் போது உயிரிழந்த பணியாளர்களுக்கு நீத்தார் நினைவு நாளாக அனுசரித்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தீயணைப்பு நிலையத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story