பிறந்தநாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பிறந்தநாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை:
அம்பேத்கர் பிறந்த நாள்
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யத்தினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோல அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி
பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு திராவிட கட்சிகளின் சார்பில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கந்தர்வகோட்டை (தனி) தொகுதி வேட்பாளர் சின்னதுரை, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழய்யா உள்பட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
கறம்பக்குடி பகுதியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கறம்பக்குடியில் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணைசெயலாளர் சந்திரபாண்டியன், தென்னகரில் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வரெத்தினம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதேபோல் துவார், பிலாவிடுதி, சுக்கிரன்விடுதி, புதுவலசல், சூரக்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இளைஞர் மன்றத்தினர் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். துவாரில் அனைத்து வீடுகளுக்கும் இளைஞர்கள் மரக்கன்றுகள் வழங்கினர்.
ஆவுடையார்கோவில், திருவரங்குளம்
ஆவுடையார்கோவிலில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர்கள் தெற்கு சின்னத்துரை, வடக்கு சரவணன் ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்தனர்.திருவரங்குளம் அருகே உள்ள கை குறிச்சியில் அம்பேத்கர் உருப்படத்திற்கு அம்பேத்கர் மன்ற மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அன்னவாசல்
அன்னவாசல் அருகே உள்ள புதூரில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் அடைக்கலம் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story