நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு
நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு
மதுரை
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் பணியின்போது இறந்த தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி “ நீத்தார் நினைவு தினம் ” அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று தென்மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களை சார்ந்த அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களிலும் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தின் அருகே உள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற நீத்தார் நினைவு தின நிகழ்ச்சியில் தென்மண்டல துணை இயக்குனர் விஜயகுமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டு நினைவு தூணிற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பெரியார் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தீ தடுப்பு சாதனங்ளை முறையாக பராமரிப்பதன் மூலம் தீ விபத்துகளை தடுக்கலாம் என்ற வாசகத்தை கருப்பொருளாக கொண்டு கொண்டு, நீத்தார் நினைவு தின வாரம் வருகிற 20-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story