மின்னல் தாக்கி தந்தை, மகன் பலி


மின்னல் தாக்கி தந்தை, மகன் பலி
x
தினத்தந்தி 15 April 2021 1:52 AM IST (Updated: 15 April 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே ஆடு மேய்க்க சென்ற தந்தை, மகன் மின்னல் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே ஆடு மேய்க்க சென்ற தந்தை, மகன் மின்னல் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆடு மேய்க்கும் தொழிலாளி
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றியம் சிக்கலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (வயது 56).
இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு ராமலட்சுமி (53) என்ற மனைவியும், ராஜேஷ் (27) என்ற மகனும், 2 மகள்களும் உண்டு. இந்த நிலையில் செந்தூர்பாண்டி நேற்று காலை தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது அவர் தனக்கு உதவியாக மகன் ராேஜசையும் அழைத்து சென்றார். 
மின்னல் தாக்கியது
அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி அருணாசலபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். 
அப்போது நேற்று மதியம் 2.30 மணிக்கு திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனை கண்ட தந்தை, மகன் இருவரும் பெரியண்ணசாமி கோவில் அருகே ஒரு வேப்பமரத்துக்கு அடியில் ஒதுங்கி நின்றனர். அப்போது திடீரென அவர்கள் இருவரையும் மின்னல் தாக்கியது. 
2 பேர் பலி
இதில் தந்தை-மகன் இருவருமே சம்பவ இடத்திலேயே  உடல் கருகி பரிதாபமாக பலியாயினர். தகவல் அறிந்து அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு ஓடி சென்றனர். தந்தை, மகன் உடல்களை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்ேகாட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆடு மேய்க்க சென்ற தந்தை, மகன் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story