போக்சோ சட்டத்தில் வடமாநில வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வடமாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 April 2021 1:52 AM IST (Updated: 15 April 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தில் வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அச்சன்புதூர்:

கடையநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என்று அவளது பெற்றோர் சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 

அப்போது, கோவில்பட்டியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரசாத் பாட்ரா (வயது 24) என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டதும், தற்போது 2 பேரும் கோவையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று 2 பேரையும் சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் பிரசாத் பாட்ராவை போலீசார் கைது செய்தனர். சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட பிரசாத் பாட்ரா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story