கோவையில் பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் ரத்து
கோவையில் பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.
கோவை
முஸ்லிம்களின் புனித ரமலான் நோன்பு தொடங்கியதையொட்டி கோவையில் நேற்று முதலாவது நாள் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமாக கோவை பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு பள்ளி வாசல்களில் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.
மேலும் அவரவர் வீடுகளில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதே நேரம் நோன்பு கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி சமூக இடைவெளியை கடைபிடித்து நடைபெற்றது.
கோவை உப்பிலிபாளையம் பள்ளிவாசல் உள்பட பல்வேறு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சியை வாங்கி வீடுகளுக்கு கொண்டு சென்று நோன்பு திறந்தார்கள். புனித ரமலானையொட்டி இரவு பிரார்த்தனை (தராவீஹ் தொழுகை) பள்ளிவாசல்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு 10 மணி வரை நடைபெற்றது.
இது குறித்து கோவை ஹிலால் கமிட்டி செயலாளர் நாசர் தீன் கூறும்போது, "பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே பள்ளிவாசல்களுக்குள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story