கருந்திரி, பட்டாசு தயாரித்த 3 பேர் கைது


கருந்திரி, பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 April 2021 2:08 AM IST (Updated: 15 April 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

தாயில்பட்டி அருகே அனுமதியின்றி கருந்திரி, பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே அனுமதியின்றி கருந்திரி, பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 
3 பேர் கைது 
தாயில்பட்டி அருகே உள்ள சல்வார்பட்டியில் விஜயகரிசல்குளத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அருகே தொகுப்பு வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு மற்றும் கருந்திரி தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு சல்வார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிருந்தாதேவி புகார் அளித்தார். அதன்பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது கருந்திரி தயாரித்து கொண்டிருந்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 42), பட்டாசு தயாரித்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் கோவிந்தராஜ் (50), மேலாளர்  மணிகண்டன் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
2 பேருக்கு வலைவீச்சு 
 52 அட்டைப் பெட்டிகளில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த சரவெடிகள், 580 காலி அட்டைப் பெட்டிகள், மற்றும் 120 கருந்திரி குரோஸ் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, 
இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. குடியிருப்பை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த ரெங்கநாயகி, அவரின் தம்பி வீரபாண்டியன், ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரையும் வெம்பக்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story