கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்ட நெல்மூடைகள் நனைந்து நாசம்
நரிக்குடி பகுதிகளில் பெய்த தொடர்மழையின் காரணமாக கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்ட நெல்மூடைகள் நனைந்து நாசமானது.
காரியாபட்டி,
நரிக்குடி பகுதிகளில் பெய்த தொடர்மழையின் காரணமாக கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்ட நெல்மூடைகள் நனைந்து நாசமானது.
கொள்முதல் நிலையம்
காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் நெல் விவசாயம் நல்ல விளைச்சல் அடைந்து விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் விளைந்த நெல்களை அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வைத்து விற்பனை செய்து வந்தனர்.
இந்தநிலையில் காரியாபட்டி, நரிக்குடி, நாலூர், வேலங்குடி ஆகிய பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்து வந்தனர். இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு கிட்டங்கி இல்லாததால் திறந்தவெளியில் நெல் மூடைகள் வைக்கப்பட்டுள்ளன.
பெரும் நஷ்டம்
இதையடுத்து நரிக்குடி பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து பெரும் நஷ்டம் அடைந்துள்ளது.
இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லை முறையாக ஏற்றிச்சென்று கிட்டங்கிகளில் சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story