அம்பேத்கர் சிலை, படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
130-வது பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திருச்சி,
130-வது பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அம்பேத்கர் பிறந்தநாள் விழா
மறைந்த சட்டமேதை அம்பேத்கரின் 130-வது பிறந்த தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் அமைச்சர் வளர்மதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான் உள்பட ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.இதில் ஒன்றிய செயலாளர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க.-கம்யூனிஸ்டு
திருச்சி தில்லைநகரில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி தலைமையில் தி.மு.க.வினர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ம.தி.மு.க.வினர் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமையிலும், திராவிடர் கழகத்தினர் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அதன் மாவட்ட செயலாளர் இந்திரஜித் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநில துணைத்தலைவர் புரட்சிக்கவிதாசன் தலைமையிலும், தே.மு.தி.க.வினர் மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநகர் மாவட்ட செயலாளர் அருள் தலைமையிலும், அறம் மக்கள் நல சங்கத்தினர் அதன் தலைவர் ராஜா தலைமையிலும், விடுதலை தொழிலாளர் முன்னணியினர் அதன் மாநில துணை செயலாளர் பிரபாகரன், ஊடகப்பிரிவு செயலாளர் ரமேஷ் குமார் தலைமையிலும் மாலை அணிவித்தனர்.மேலும் ஏ.பி.வி.பி. உள்பட பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் கட்சிகள் சார்பிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் புரட்சி மணி தலைமையில் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
லால்குடி
லால்குடியில் தி.மு.க. அலுவலகம் முன் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தி.மு.க. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். லால்குடி ரவுண்டானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு தொகுதி கழக செயலாளர் மரியகமல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
துறையூர், உப்பிலியபுரம்
இதுபோல் துறையூர் கடைவீதியில் நடந்த விழாவுக்கு தி.மு.க. மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் மகாலிங்கம் தலைமை தாங்கி அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களிலும் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதுபோல் உப்பிலியபுரம் அருகே எரகுடியில் பாரதீய ஜனதா கட்சியின் உப்பிலியபுரம் தெற்கு மண்டல பட்டியல் அணி சார்பாக பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் முருகதாஸ் தலைமையில் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story