திருச்சி, துறையூரில் வெப்பத்தை தணித்த கோடை மழை


திருச்சி, துறையூரில் வெப்பத்தை தணித்த கோடை மழை
x
தினத்தந்தி 15 April 2021 2:42 AM IST (Updated: 15 April 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி, துறையூரில் கோடை மழை வெப்பத்தை தணித்தது.

திருச்சி, 
திருச்சி நகரில் நேற்று காலையில் வெயில் கொளுத்தியது. மதியம் 12 மணிக்கு மேல் திடீரென வானில் மேகங்கள் திரண்டன. மேகங்கள் திரண்டு வந்தாலும் வெயிலும் அடித்துக் கொண்டு தான் இருந்தது. இந்த நேரத்தில் திடீரென மழை பெய்தது. இந்த மழையினால் நகரில் ஓரளவு வெப்பம் தணிந்தது. மாலையில் மீண்டும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை வரவில்லை. குளிர்ந்த காற்று வீசியது. இதுபோல் துறையூரில் கடந்த சில தினங்களாக அதிக அளவில் வெப்பமும், வெப்ப காற்றும் வீசி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேலடுக்கு வானிலை சுழற்சி காரணமாக பல்வேறு பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று துறையூரில் காலையில் இருந்தே அதிக அளவில் வெப்பக்காற்று வீசி வந்தது.  இந்த நிலையில் மாலையில் திடீரென கார்மேகங்கள் ஒன்று திரண்டன. தொடர்ந்து சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் கோடை வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிவரை தாத்தையங்கார் பேட்டையில் 30 மில்லி மீட்டரும், கொப்பம்பட்டியில் 3 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளது.

Next Story