தாரமங்கலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி வனிச்சம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் அய்யம் பெருமாள். இவருடைய மனைவி மல்லிகா. இவர்களின் மூத்த மகள் கலாமணி (வயது 21) என்பவருக்கும், ஜலகண்டாபுரம் அருகே உள்ள தோரமங்கலம் பொடையன்தெரு பகுதியை சேர்ந்த தறித்தொழிலாளி கார்த்திகேயன் (25) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கலாமணி கடந்த 6 ஆண்டுகளாக சின்னப்பம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் மருத்துவமனையில் வேலைபார்க்கும் சக ஊழியர்களிடம் ஏற்பட்ட கருத்து மோதலால் மனமுடைந்து காணப்பட்ட கலாமணியை கணவர் கார்த்திகேயன் வேலைக்கு செல்லவேண்டாம் என கூறியுள்ளார். தொடர்ந்து வேலைக்கு சென்றுவந்த கலாமணி கடந்த 4 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி, அரியானூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலாமணி நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து கலாமணியின் தாயார் மல்லிகா, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story