தர்மபுரி மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா தொற்று


தர்மபுரி மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 15 April 2021 7:41 AM IST (Updated: 15 April 2021 7:46 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 387 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 9 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதனால் கொரோனா பாதிப்பு காரணமாக மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை தற்போது 470 ஆக அதிகரித்துள்ளது.

Next Story