செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை தாண்டியது - ஒரே நாளில் 772 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 772 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 772 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 93-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 57 ஆயிரத்து 152 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 852-ஆக உயர்ந்தது. 5 ஆயிரத்து 89 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 124 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 485 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 30 ஆயிரத்து 579 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469-ஆக உயர்ந்துள்ளது. 1,437 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 383 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 49 ஆயிரத்து 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46 ஆயிரத்து 322 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 2,173 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 728 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்துள்ளனர்.
Related Tags :
Next Story