புதுச்சேரியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை


புதுச்சேரியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை
x
தினத்தந்தி 15 April 2021 4:11 PM IST (Updated: 15 April 2021 4:11 PM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறந்த நாள்விழா

புதுச்சேரி அரசு சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சட்டசபை வளாகம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் கவர்னரின் சிறப்பு ஆலோசகர்கள் சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேராக கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு சென்றார். அங்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ வைத்தியநாதன், கட்சியின் துணை தலைவர் பி.கே.தேவதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்..

தொடர்ந்து அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமையில் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

என்.ஆர்.காங்கிரஸ்

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜவேலு, கட்சியின் செயலாளர் ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொருளாளர் ரவி பாண்டுரங்கன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க. மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ராமதாஸ், சுத்துகேணி பாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தி.மு.க.

தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கோபால், கார்த்திகேயன், செந்தில்குமார், துணை அமைப்பாளர் குணாதிலீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக லப்போர்த் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் சிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் அறிவுறுத்தலின் பேரில் செஞ்சி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பலராமன், துணை அமைப்பாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க.

பா.ஜ.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சாய் சரவணன் குமார், அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில செயலாளர் வேல்முருகன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story