கோத்தகிரி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை


கோத்தகிரி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 April 2021 7:41 PM IST (Updated: 15 April 2021 7:41 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

கோத்தகிரி

கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜக்கனாரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தின சம்பளமாக நிர்ணயிக்கப்பட்ட ரூ.273-ஐ வழங்காமல் ரூ.200 மட்டும் வழங்குவதோடு வாரத்தில் 6 நாட்கள் வேலை பார்த்தால் 4 நாட்களுக்கு மட்டுமே சம்பளமாக வழங்குவதாகவும், அதுகுறித்து கேட்டால் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஓவர்சியர் தங்களை தகாத வார்தைகளால் பேசுவதாகவும் கூறி நேற்று மதியம் 12 மணியளவில் ஒன்றிய அலுவலகத்தை 20-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரகுமாரி ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story