கொரோனா விழிப்புணர்வு முகாம்
கொரோனா விழிப்புணர்வு முகாம்
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் கோத்தகிரி போலீசார் சார்பில் காமராஜர் சதுக்கம் அருகில் உள்ள ஒரு தனியார் அரங்கத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், கொரோனா பரவாமல் தடுக்க அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கை கழுவ கிருமி நாசினி பயன்படுத்துவதுடன், உரிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசின் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். இதில் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், டாக்சி டிரைவர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று குன்னூரில் போலீசார் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம், அங்குள்ள வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடந்தது.
இதற்கு குன்னூர் இன்ஸ்பெக்டர் பிரித்வி ராஜ் தலைமை தாங்கி பேசினார். வெலிங்டன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ரகீம் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story