மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லை
மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லை
குன்னூர்
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமாகவும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமாகவும் மலைரெயில் இயக்கப்படுகிறது.
இதில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது.
நேற்று மதியம் 12.35 மணிக்கு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சென்ற மலைரெயிலில் சுமார் 20 பயணிகள் மட்டுமே பயணித்தனர். இதனால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. கோடை சீசன் தொடங்கிய பிறகு கொரோனா பாதிப்பு குறைந்தால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story