பொதுமக்களுக்கு முக கவசம்- கபசுர குடிநீர்


பொதுமக்களுக்கு முக கவசம்- கபசுர குடிநீர்
x
தினத்தந்தி 15 April 2021 10:30 PM IST (Updated: 15 April 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

வசவப்பபுரம் சோதனை சாவடியில் பொதுமக்களுக்கு போலீசார் முக கவசம், கபசுர குடிநீர் வழங்கினர்.

ஸ்ரீவைகுண்டம், ஏப்:
பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை ஆகியன இணைந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக முக கவசம், கபசுர குடிநீர் வழங்கினர். நெல்லை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வசவப்புரம் காவல் சோதனை சாவடியில் இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி, சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார் வெங்கடேசன், சித்த மருத்துவ அலுவலர் செல்வக்குமார், சுகாதார ஆய்வாளர் ஜாகீர், முறப்பநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவசகாயம் மற்றும் போலீசார், பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு இணைச்செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வல்லநாடு சித்த மருத்துவ அலுவலர் செல்வக்குமார், பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் நிறுவன தலைவர் சுகன் கிறிஸ்டோபர் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story