வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை


வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 15 April 2021 10:36 PM IST (Updated: 15 April 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை

திருப்பூர்
திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த சந்திரா மற்றும் அவருடைய உறவினர்கள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கே.வி.ஆர்.நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறேன். ரேஷன் கார்டு உள்ளது. இந்தநிலையில் எனது இடத்தில் வீடு கட்டிக்கொண்டிருந்தபோது அருகே வசிக்கும் சுப்பிரமணி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வேலை செய்ய விடாமல் தடுத்தனர். இதுகுறித்து மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் உரிய நடவடிக்கை இல்லை. இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வீடு கட்டுவதற்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story