வெள்ளகோவிலில் நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமானது.
வெள்ளகோவிலில் நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமானது.
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமானது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
நூல் மில்லில் தீ
வெள்ளகோவில், குட்டைகாடு பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி, இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நூல் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த மில்லில் மிக்ஸிங் குடோன் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் 3 சிப்டுகளாக மொத்தம் 24 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் நூல் மில்லில் 10 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர், அப்போது திடீரென மின்கசிவு காரணமாக மிக்சிங் குடோன் பகுதியில் கழிவு பஞ்சில் தீப்பிடித்தது, உடனே இதை அறிந்த ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
ரூ.6 லட்சம் நாசம்
இந்த தகவலின் பேரில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி தனசேகர் மற்றும் வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் நிண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இவர்களுக்கு உதவியாக தனியார் தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் கொண்டுவந்து வழங்கப்பட்டது.
இந்த தீ விபத்தினால் நூல் மில்லில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான கழிவு பஞ்சுகள் எரிந்து நாசமானது. தீ விபத்தின் போது மில் ஊழியர்கள் அங்கிருந்து வெளியே சென்று விட்டதால் அவர்கள் எவ்வித காயமின்றி தப்பினர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அத்துடன் அருகிலிருந்த குடியிருப்புகள் தப்பின.
Related Tags :
Next Story