கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு


கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 15 April 2021 11:16 PM IST (Updated: 15 April 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

லாலாபேட்டை
லாலாபேட்டையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.  பின்னர் முருகனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story