கொரோனா பாதித்தவர்களை வீட்டிற்கு அனுப்புவதாக புகார்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களை ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகு வீட்டிற்கு அனுப்புவதாக புகார் எழுந்து உள்ளது. இதனால் மேலும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களை ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகு வீட்டிற்கு அனுப்புவதாக புகார் எழுந்து உள்ளது. இதனால் மேலும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கொரோனா நோயாளிகள்
பொள்ளாச்சி பகுதியில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை பகுதிகளில் தொற்று பாதித்த நபர்கள் சிகிச்சைக்காக பொள்ளாச்சி தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு முதலில் ஸ்கேன், எக்ஸ்-ரே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இதில் ஏதாவது தொந்தரவுகள் இருந்தால் அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவசர சிகிச்சைகள் தேவைப்படுவோரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
வீட்டுக்கு அனுப்புவதாக புகார்
இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ஸ்கேன் பரிசோதனைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அங்கு ஸ்கேன் பரிசோதனை செய்த பிறகு அவர்களை வீட்டிற்கு அனுப்புவதாக புகார் எழுந்து உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளை ஸ்கேன் பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
அங்கு அவர்களுக்கு ஸ்கேன் செய்த பிறகு பரிசோதனை முடிவுகள் வருவதற்கு 2 நாட்கள் ஆகும் அதன் பிறகு வாருங்கள் என்று அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
பரவும் அபாயம்
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிப்பதில்லை. இதனால் கொரோனா நோயாளிகள் ஆஸ்பத்திரியில் வெளியே வந்து பஸ்சில் செல்வது, கடைகளுக்கு சென்று டீ குடிப்பது, சாப்பிடுவதால் மேலும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஸ்கேன் பரிசோதனை செய்த பிறகு அவர்களை அங்கேயே கொரோனா வார்டில் அனுமதிக்கலாம்.
அவ்வாறு செய்யாமல் வீட்டிற்கு அனுப்பி வைப்பதால் மேலும் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story