வியாபார போட்டியில் தகராறு;10 பேர் மீது வழக்கு
வியாபார போட்டியில் தகராறு;10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவிலில் முடவேலி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், முருகன் இருவரும் தேங்காய்-பழம் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகின்றனர். இருவரின் கடைகள் அருகருகே உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தங்கள் கடையில் பொருட்களை வாங்குமாறு அழைத்துள்ளனர். இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் காயம் அடைந்த ராஜேந்திரன், அவரது மகன் பாலாஜி ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதைப்போலவே முருகனை சிலர் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story