கார்த்திகை சிறப்பு வழிபாடு


கார்த்திகை சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 16 April 2021 12:02 AM IST (Updated: 16 April 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்ட முருகன்கோவில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது

வேதாரண்யம்;
நாகை மாவட்ட முருகன்கோவில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
வேதாரண்யேஸ்வரர் கோவில்
சித்திரை மாத கார்த்திகை நட்சத்திரத்தையொட்டி நேற்று நாகை மாவட்ட முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுக கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமி ,  வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.  கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர்கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு பால் உள்பட பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றது. 
இதைப்போல தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் உள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வழிபாட்டில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். 
சிக்கல் சிங்காரவேலவர் கோவில் 
நாகை மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் நேற்று சித்திரை மாத கார்த்திகையை முன்னிட்டு சிங்காரவேலவருக்கு, பால், பன்னீர், திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து  சாமி தரிசனம் செய்தனர்.

Next Story