அறந்தாங்கியில் மணல் கடத்திய 3 பேர் கைது


அறந்தாங்கியில் மணல் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 April 2021 12:15 AM IST (Updated: 16 April 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கியில் மணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அறந்தாங்கி
அறந்தாங்கி போலீசார் நேற்று கோட்டை பைப் லயன் மற்றும் நாயக்கர்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளாற்று பகுதியில் இருந்து வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக பெருமாள்பட்டியை சேர்ந்த இளங்கோவன் (வயது 45), கருவிடைசேரியை சேர்ந்த ராஜேந்திரன் (43) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல நாயக்கர்பட்டி தாலுகா அலுவலகம் பகுதியில் இருந்து ஆட்டோவில் மணல் கடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story