சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.46½ லட்சம் காணிக்கை வசூல்; 1 கிலோ தங்கமும் கிடைத்தது
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.46½ லட்சம் காணிக்கை வசூல் ஆனது. அத்துடன் 1 கிலோ தங்கமும் கிடைத்தது.
சமயபுரம், ஏப்.16-
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாதம் இருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் 2-வது முறையாக நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் கல்யாணி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி, கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோவில் உதவிஆணையர் நந்தகுமார், கோவில் மேலாளர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில்ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.46 லட்சத்து 63 ஆயிரத்து 853, 1 கிலோ 7 கிராம் தங்கம், 1 கிலோ 160 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணமும் காணிக்கையாக கிடைத்தது.
Related Tags :
Next Story