திருச்சியில் ரூ.3 கோடியில் நடைபெற்று வரும் மாரீஸ் மேம்பாலம் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

திருச்சியில் ரூ.3 கோடியில் நடைபெற்று வரும் மாரீஸ் மேம்பாலம் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
x

திருச்சியில் ரூ.3 கோடியில் நடைபெற்று வரும் மாரீஸ் மேம்பால சீரமைப்பு பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி, 
திருச்சியில் ரூ.3 கோடியில் நடைபெற்று வரும் மாரீஸ் மேம்பால சீரமைப்பு பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாரீஸ் மேம்பாலம்

திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து உறையூர், தில்லை நகர் பகுதியை இணைக்கும் முக்கிய பாலமாக மாரீஸ் தியேட்டர் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலம் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் காரணமாக பாலத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த பாலத்தில் சில மாதங்களாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மழைக்காலம் முடிந்ததும் ஏற்கனவே ஒருமுறை தற்காலிக சீரமைப்பு பணி முடிவடைந்த நிலையில் மீண்டும் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இதனால் பாலத்தின் பலம் மேலும் குறைந்தது.

ரூ.3 கோடியில் சீரமைப்பு

இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அதனை ரூ.3 கோடி திட்ட மதிப்பீட்டில் சீரமைப்பு செய்வதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன. இடையில் சட்டமன்ற தேர்தல் காரணமாக பாலம் செம்மைப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அந்த பாலத்தின் வழியாக தற்போது இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.

கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதியில்லை. பாலம் சீரமைப்பு பணிகள் நத்தை வேகத்தில் நடந்து வருவதால் அதனை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story