நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
அருப்புக்கோட்டை அருேக நாயக்கர் கால கல்வெட்டு கண்ெடடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருேக நாயக்கர் கால கல்வெட்டு கண்ெடடுக்கப்பட்டுள்ளது.
நாயக்கர் கால கல்ெவட்டு
இதுகுறித்து அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் விஜயராகவன் வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அருப்புக்கோட்டை அருகே தம்ம நாயக்கன்பட்டியில் நாயக்கர் கால கல்வெட்டு ஆனது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்லானது வீரமரணமடைந்த வீரனின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றும் வகையில் நடுகல் எழுப்பி வழிபாடு செய்யும் வழக்கத்தையும் நம் முன்னோர்கள் பின்பற்றினர்.
நினைவுக்கல்
மக்கள் நலனுக்காக செயல்பட்டவர்கள் சான்றாக கிணறு வெட்டுதல், நீரோடை பராமரித்தல், வழிப்போக்கர்கள் தங்குவதற்கு சத்திரம் ஏற்படுத்துதல் போன்ற மக்கள் நலப் பணிகளை தொடரும்போது எதிர்பாராதவிதமாக மரணம் ஏற்பட்டால் அவர்களுடைய சேவையை போற்றும் வகையில் வணங்கிய நிலையில் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் நினைவுக்கல் என்று அழைக்கப்பட்டன. இந்த சிற்பங்கள் வணங்கிய நிலையில் இது ஆண் சிற்பங்களும், தலையில் நாயக்கர் காலத்துக்குரிய சருகு கொண்டையும், காதுகளில் வட்ட வடிவமான காதணியும், கைகளில் காப்பும், இடை முதல் பாதம் வரை பஞ்சாடைகள் அணிந்து இரு பாதங்கள் சம அளவாக வைத்து நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.
குல தெய்வம்
எழுத்துடை நினைவு கல்லில் வாசகம் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது பராபவ ஆண்டு சித்திரை மாதம் பளவறயன் என்பவர் இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னர் ஆவார்.
இவர் ஆட்சிக்குட்பட்ட மண்ணில் வாழ்ந்த சடையனின் மகன்களான அப்பணன் மற்றும் கருப்பணன் நினைவாக எடுக்கப்பட்ட நினைவுக்கல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நினைவு கல்லை அந்த பகுதியில் வாழ்கின்ற குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஒன்று கூடி தங்கள் குலதெய்வமாக எண்ணி வழிபாடு செய்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story