கோவையில் 2 மாதங்களில் தவற விட்ட 55 செல்போன்கள் மீட்பு
கோவையில் 2 மாதங்களில் தவற விட்ட 55 செல்போன்கள் மீட்கப்பட்டன.
கோவை
கோவை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் செல்போன்கள் தொலைந்துபோனதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி 55 செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர்.
அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் கலந்து கொண்டு செல்போன்களை உரியவர்க ளிடம் ஒப்படைத்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,641 செல்போன்களும், இந்த ஆண்டு இதுவரை 80 செல்போன்களும் காணாமல் போனதாக புகார் வந்துள்ளது. சைபர் கிரைம் பிரிவு மூலம் காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 35 செல்போன்கள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 400 செல்போன்கள் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
செல்போன்கள் தொலைந்தாலோ, திருட்டு போனாலோ அருகில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சங்கு, தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன், தலைமை காவலர்கள் வேலுச்சாமி, மகேஸ்குமார், விஜய்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story