எடப்பாடி அருகே சரபங்கா ஆற்றில் மூழ்கிய சிறுவன் பலி
சரபங்கா ஆற்றில் மூழ்கிய சிறுவன் பலியானான்.
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த சின்ன மணலி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் குபேந்திரகுமார். இவருடைய மகன் இனியவன் (வயது 12). அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் மகன் ஹரிஷ் (12). எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பாலம் அருகில் செல்லும் சரபங்கா ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் குளிக்க இனியவனும், ஹரிசும் சென்றுள்ளனர். அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதில் இனியவன் சிகிச்சை பலனின்றி இறந்தான். ஹரிஷ் உடனடியாக மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இளவரசன், சப்-இன்ஸ்பெக்டர் பெரியதம்பி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story