ரவுடி கொலை வழக்கு: நாகர்கோவிலில் பதுங்கி உள்ள கொலையாளியை பிடிக்க நடவடிக்கை
சேலத்தில் ரவுடி கொலை வழக்கில் முக்கிய கொலையாளி நாகர்கோவிலில் பதுக்கி உள்ளதால், அவனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
சேலம்:
சேலத்தில் ரவுடி கொலை வழக்கில் முக்கிய கொலையாளி நாகர்கோவிலில் பதுக்கி உள்ளதால், அவனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
ரவுடி கொலை
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் செல்லதுரை. பிரபல ரவுடி. இவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது. இந்த கொலை குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீசார் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக இதுவரை 31 பேரை கைது செய்துள்ளனர். இதில் 14 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து உள்ளது. மேலும் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதனிடையே கைது செய்யப்பட்டவர்களில் இதுவரை 4 பேர் ஜாமீனில் வெளியே வந்து உள்ளனர். மேலும் சிலர் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
நாகர்கோவிலில் பதுங்கல்
இந்த கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய கொலையாளியான சுதர்சன் என்கிற சேட்டான் தற்போது தலைமறைவாக உள்ளார். இவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-
ரவுடி செல்லத்துரை கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட சேட்டான் தலைமறைவாக உள்ளான். விசாரணையில் தற்போது நாகர்கோவிலில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவனை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் சேட்டான் மீது வேலூர், திருவண்ணாமலை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை, மிரட்டல் உள்பட மொத்தம் 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story