கோவிலில் அகல் விளக்கு ஏற்றும்போது சேலையில் தீப்பிடித்து படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு


கோவிலில் அகல் விளக்கு ஏற்றும்போது சேலையில் தீப்பிடித்து படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 16 April 2021 9:07 AM IST (Updated: 16 April 2021 9:07 AM IST)
t-max-icont-min-icon

கோவிலில் அகல் விளக்கு ஏற்றும்போது சேலையில் தீப்பிடித்து படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பொன்னேரி, 

பொன்னேரி திருவாயர்பாடி ராமசாமி தெருவை சேர்ந்தவர் புண்ணியகோட்டி (வயது 53). இவரது தாயார் வனதாட்சி அம்மாள் (85). இவர் கடந்த 10-ந்தேதி அருகில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்றார். கோவிலில் அகல் விளக்கு ஏற்றியபோது அதில் இருந்த தீ அவரது சேலையில் பிடித்து அவர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பொன்னேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story