செங்கல்பட்டில் ஒரே நாளில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
செங்கல்பட்டில் ஒரே நாளில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில் கங்காதுரை என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் ரூ.20 ஆயிரம், சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான கோழி கறிக்கடையில் ரூ.500, குணசேகரன் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் பூட்டை உடைத்து ரூ.1000 மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவர்கள் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி பார்த்ததில் வட மாநில வாலிபர்கள் 2 பேர் உணவகத்தில் திருடியது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story