கயத்தாறு இந்திராநகரில் சுடுகாட்டுக்கு நிரந்தர இடம் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கயத்தாறு இந்திரா நகரில், சுடுகாட்டுக்கு நிரந்தர இடம் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறு பகுதியில் சுடுகாட்டுக்கு நிரந்த இடம் வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சுடுகாட்டுக்கு இடம்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நகர பஞ்சாயத்து பகுதியில் இந்திரா நகர் உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் நிரந்தர சுடுகாடு இல்லை. உயிர் இழந்தவர்களின் உடல்களை அந்த பகுதியில் உள்ள குளத்தின் கரைகளில் தற்காலிகமாக புதைத்து வருகின்றனர். இதில் பல சிரமங்கள் ஏற்படுவதாகவும், உடல்களை புதைப்பதற்கும் எரிப்பதற்கும் சுடுகாட்டுக்கு நிரந்தர இடம் வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் நெடும்காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் இறந்த ஒருவரின் உடலை எரியூட்டும் போது மழை பெய்துள்ளது. இதனால் உடல் பாதி எரிந்தும், எரியாமலும் இருந்துள்ளது. இதனால் மன வேதனை அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலையில் இந்திராநகரில் சுடுகாட்டுக்கு நிரந்தர இடம் ஒதுக்க கோரி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் சுடுகாட்டுக்காக தனி இடம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story