திருவாரூர் ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி கிழிந்தது புதிய கொடி ஏற்ற கோரிக்கை


திருவாரூர் ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி கிழிந்தது புதிய கொடி ஏற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 16 April 2021 7:23 PM IST (Updated: 16 April 2021 7:23 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி கிழிந்தது. இதனால் அந்த கொடி இறக்கப்பட்டது. எனவே புதிய கொடி ஏற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர், 

திருவாரூர் ரெயில் நிலையம் வாசலில் ரெயில்வே துறை சார்பில் புதிதாக 100 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டு கடந்த குடியரசு தின விழாவில் பிரமாண்டமான தேசியக்கொடி ஏற்றப்பட்டு பட்டொளி வீசி பறந்தது. இந்த தேசிய கொடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 100 அடி உயர கொடிக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடியை கண்ட சிறுவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கூட்டெரிக்கும் வெயில், மற்றும் அவ்வப்போது பெய்த மழை மற்றும்

காற்றால் தேசியக்கொடி லேசாக கிழிந்து சேதமடைந்தது. கிழிந்து சேதமடைந்த தேசியக்கொடியை கண்ட மக்கள் வேதனை அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று சேதமடைந்த தேசியக்கொடியை ரெயில் துறையினர் இறக்கினர். இதற்கு பதில் புதிய தேசியக்கொடி ஏற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

வர்ணங்கள் மங்கியது

இது குறித்து திருச்சி கோட்ட ெரயில் உபயோகிப்பாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் பாஸ்கரன் கூறியதாவது:-

திருவாரூர் ெரயில் நிலையம் முன்பு 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டதற்கு ரெயில்வே துறையை பொதுமக்கள் பாராட்டினர். இயற்கை பேரிடர், கடும் வெயில் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசியக்கொடியின் ஓரங்கள் கிழிந்து கொடியின் வர்ணங்கள் மங்கியது. இதை கண்ட அனைவரின் மனதிலும் வேதனை ஏற்பட்டது. எனவே ரெயில்வே நிர்வாகம் சேதமடைந்த தேசியக்கொடியை புதிதாக மாற்றி தர வேண்டும். இதுகுறித்து ரெயில்வே துறைக்கு உரிய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story