சாத்தான்குளம் பகுதியில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்


சாத்தான்குளம் பகுதியில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 16 April 2021 7:25 PM IST (Updated: 16 April 2021 7:25 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் பகுதியில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பேருராட்சி பகுதி மற்றும் தட்டார்மடம், ஆனந்தபுரம், படுக்கப்பத்து உள்ளிட்ட பகுதியில் வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறையினர் இணைந்து தனி குழு அமைத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று சாத்தான்குளம் -இட்டமொழியில் சாலையில் முககவசம் அணியாமல் சென்ற முன்னாள் பேருராட்சி மன்ற உறுப்பினரக்கு ரூ.200 அபராதம் விதித்து,  முககவசம் வழங்கப்பட்டது. அதே பகுதியில் முககவசம் அணியாமல் வந்த  20-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. 

Next Story