நாகை தேவநதியில் தட்டு வண்டி தொழிலாளி பிணம் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
நாகை தேவநதியில் தட்டு வண்டி தொழிலாளி பிணம் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
நாகப்பட்டினம்,
நாகை கிழக்கு கடற்கரை சாலை அருகே தேவநதியில், ஒரு ஆண்பிணம் மிதப்பதாக நாகை டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக மிதந்தவர் நாகை மாங்கொட்டை சுவாமிநாதர் கோவில் தெருவை சேர்ந்த தட்டு வண்டி ஓட்டும் தொழிலாளி கிருபா(வயது50) என்று தெரியவந்தது. இதுகுறித்து அவர் மனைவி வெண்ணிலா கொடுத்த புகாரின்பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருபா எப்படி இறந்தார்? அவர் சாவில் மர்மம் ஏதும் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story