கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள் மூடல்
கம்பத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் நேரில் சென்று அங்கு வசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகத்தினர் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சுற்றியுள்ள சாலையில் வேறு யாரும் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைத்து வருகின்றனர்.
அதன்படி கம்பம் மாலையம்மாள்புரம், நந்தனார் காலனி, பசும்பொன்முத்துராமலிங்கதேவர் தெரு ஆகிய பகுதிகளை தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர்.
Related Tags :
Next Story