பி.ஏ.பி.வாய்க்காலில் குளித்த வாலிபர் சாவு


வாலிபர் சாவு
x
வாலிபர் சாவு
தினத்தந்தி 16 April 2021 9:13 PM IST (Updated: 16 April 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

பி.ஏ.பி.வாய்க்காலில் குளித்த வாலிபர் சாவு

நெகமம்

திண்டுக்கல் மாவட்டம், கம்பலப்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் வினோத்குமார் (வயது 21). 

இவர் உடுமலை அருகே உள்ள சின்னப்பாப்பனூத்து பி.ஏ.பி.வாய்க்காலில் கடந்த 14- ந்தேதி குளிக்கச் சென்றுள்ளார்.

 அப்போது வாய்க்காலில் இறங்கி குளித்தபோது, அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். 


நெகமம் அருகே ஆவலப்பம்பட்டியில் பி.ஏ.பி.வாய்க்காலில் மரக்கிளையின் அடியில் வினோத்குமார் பிணமாக கிடந்தது தெரியவந்தது. 

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் நெகமம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story