கொடைக்கானலில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது


கொடைக்கானலில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 16 April 2021 9:43 PM IST (Updated: 16 April 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

கொடைக்கானல்:
கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில் உகார்த்தே நகர் உள்ளது. இந்த சாலையில் தடுப்புச்சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 
இந்தநிலையில் நேற்று காலை கொடைக்கானலில் இருந்து பெருமாள் மலை நோக்கி சென்ற கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த கார் சாலையோரம் சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஒரு வீட்டின் மீது மோதி நின்றது. இதில் காரை ஓட்டி வந்த அப்பகுதியை சேர்ந்த டிரைவர் குமார்(வயது 35) லேசான காயத்துடன் உயிர் தப்பினார். எனினும் கார் பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் உகார்த்தே நகரில் சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story