தஞ்சைக்கு மீன் ஏற்றி வந்த ஆந்திராவை சேர்ந்த லாரி டிரைவர் திடீர் சாவு போலீசார் விசாரணை


தஞ்சைக்கு மீன் ஏற்றி வந்த ஆந்திராவை சேர்ந்த லாரி டிரைவர் திடீர் சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 April 2021 4:38 PM GMT (Updated: 16 April 2021 4:38 PM GMT)

ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு மீன் ஏற்றி வந்த டிரைவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர், 

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் பாண்டு (வயது 32). இவர் ஆந்திரா மாநில துறைமுகத்தில் இருந்து தஞ்சைக்கு லாரியில் மீன் லோடு ஏற்றி கொண்டு வந்தார். பின்னர் தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட்டுக்கு வெளியே லாரியை நிறுத்தி மீன்லோடுகளை இறக்கி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக பாண்டுவை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டு பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாண்டு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story