குற்ற வழக்கில் கைதான வாலிபருக்கு சிறை


வாலிபருக்கு சிறை
x
வாலிபருக்கு சிறை
தினத்தந்தி 16 April 2021 10:32 PM IST (Updated: 16 April 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

குற்ற வழக்கில் கைதான வாலிபருக்கு சிறை

பொள்ளாச்சி


பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் ஹரி பிரசாத் என்கிற சுருட்டை ஹரி (வயது 22). இவர் மீது கொலை, கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி பொள்ளாச்சி தாசில்தார் தணிகவேலிடம் 6 மாத காலத்திற்கு எந்த குற்ற செயலிலும் ஈடுபட மாட்டேன் என்று ஹரிபிரசாத் பிணைய பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி ஹரிபிரபு என்பவரை தகாத வார்த்தையால் திட்டி, அவரது செல்போனை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஹரிபிரசாரத்தை கைது செய்தனர்.

இதற்கிடையில் பிணைய பத்திரத்தை மீறி குற்ற செயலில் ஈடுபட்டதால் ஹரி பிரசாத்தை பொள்ளாச்சி மேற்கு போலீசார் நேற்று சப்-கலெக்டரும், நிர்வாக துறை நீதிபதியுமான வைத்திநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து அவர் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 
இதை தொடர்ந்து போலீசார் ஹரிபிரசாத்தை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story