திருப்பூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்
திருப்பூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்
திருப்பூர்
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி காய்ச்சல் பாதிப்பு இருக்கிறவர்கள் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். வெந்நீர் குடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை சுகாதாரத்துறை வழங்கி வருகிறது. இதுபோல் மாநகர் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு மருந்துகளையும் தெளித்து வருகிறது.
தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் சி.டி.சி. பஸ் டெப்போவில் டயர் உள்ளிட்ட பொருட்களில் தேங்கியிருந்த மழைநீர் மற்றும் கழிவுநீரை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி மருந்து தெளித்தனர். மேலும், தண்ணீர் தேங்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story